Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பில் ஒக்டோபர் 9க்குள் பதிலளிக்க தோனிக்கு உத்தரவு

புரட்டாதி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை காணொளியாகப் பதிவு செய்யக் கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி. சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு தோனிக்கு சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் தமக்கு எதிராக அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி. சம்பத்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி மானநஷ்டஈடு கோரி 2014ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், தோனியின் வாக்குமூலத்தை காணொளி வடிவில் பதிவு செய்வதற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி சம்பத்குமார் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக நீதித்துறை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், முழுமையான காணொளிப் பதிவை எந்தவிதத் திருத்தமும் இன்றி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

மேலும், தோனியின் வாக்குமூலத்தை தனியார் இடங்களில் பதிவு செய்யாமல், நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அரசு கட்டிடத்திலோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சம்பத்குமார் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் தோனிக்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பர் 8 முதல் 11 வரை பாராளுமன்றம் கூடவுள்ளது

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும் – ரணில் விக்கிரமசிங்க

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த நமீதா – வட மாகாண சுற்றுலாப் பணியகத்திற்கு வருகை

ஐப்பசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் மற்றும் நாவற்காடு கடற்கரை பகுதிகளில் பெருந்தொகை பீடி இலைகள் கடற்படையினால் மீட்பு

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube