Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்

#தோட்டப்புறபாடசாலைகள் #கல்விமேம்பாடு #புதியதிட்டம் #பாடசாலைமேம்பாடு #மாணவர்கல்வி #கல்விவளர்ச்சி #மலையககல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள்எதிர்காலம் #EducationDevelopment #SchoolDevelopment #SriLankaEducation #தோட்டப்புறபாடசாலைகள் #கல்விமேம்பாடு #புதியதிட்டம் #பாடசாலைமேம்பாடு #மாணவர்கல்வி #கல்விவளர்ச்சி #மலையககல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள்எதிர்காலம் #EducationDevelopment #SchoolDevelopment #SriLankaEducation

செப்டம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தோட்டப்புறப் பகுதிகளைச் சார்ந்த பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்குகளில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது தோட்டப்புறப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளைக் கண்டறிந்து, தோட்டப்புற பாடசாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில் இந்தப் பட்டறை நடத்தப்பட்டது.

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்காக புதிய திட்டங்களை ஆரம்பிப்பது, தேசிய மூலோபாய மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் மாதிரிக்கு ஏற்ப திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது, தொழிற்கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வேலைத்திட்டங்களை கள மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளும் கருத்துக்களும் இங்கு ஆராயப்பட்டன.

மேலும், ஆசிரியர்களுக்கான வீடுகளை அமைத்தல், 34 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்தல், 23 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு மதில்களை அமைத்தல் போன்ற தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அமைச்சரவை அனுமதி பெற்றுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மாணவர் நலன்புரி போன்ற துறைகளின் அபிவிருத்தி தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக வலியுறுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஜூன் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நபர்!

மே 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்கள்: பிராந்திய நாடுகள் கடும் கண்டனம்

அக்டோபர் 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நல்லதன்னி – சிவனொளிபாதமலை வீதியில் நிலச்சரிவு!

ஆகஸ்ட் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube