Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் பகுதியில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள்

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சாமிமலை நிருபர்

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் தோட்டப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, ஆற்றங்கரையை அண்மித்த குடியிருப்புகள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஓல்டன் ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் ஆற்றடி பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் காட்டாறு மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓல்டன் பகுதியில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இதுவே முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின்போது குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன், ஆலய வளாகமும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு ஓல்டன் தோட்டத்தின் 10ஆம் இலக்கப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது ஆற்றடி பிள்ளையார் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அப்பகுதியில் வசித்த 24 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய மழை காரணமாகவும் ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வெள்ளநிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றங்கரை குடியிருப்புகளின் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை முறையாக பராமரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்ன தேரரை காப்பாற்றும் பொலிஸார் – சிறுமியின் பக்க ஆதாரங்கள் வழங்கப்படும் விசாரணையில் மெத்தன போக்கு!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – ஜெனதீஸ்வரன் எம்.பி பரபரப்பு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்களவர்கள் எனப்படும் இனம் இலங்கையில் மட்டுமே வாழுகிறது – பெங்கமுவே நாலக தேரர்

ஆவணி 31, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

அனோஜனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை…

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube