Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் – நாகமுத்து பிரதீபராஜா

புரட்டாதி 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்

– நாகமுத்து பிரதீபராஜா –

கடந்த 17.09.2026 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்காக உருவாகிய தாழமுக்கம் தற்போது (20.09.2026 மாலை 3.00 மணி) தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (21) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் மையச் சுழற்சி நோக்கி அதிகளவான ஈரப்பதனை அரபிக்கடலில் இருந்து ஈர்க்கின்றது. இதன் காரணமாக இலங்கையின் மேற்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கன மழை கிடைத்து வருகின்றது. இந்த கனமழை எதிர்வரும் 24.09.2026 வரை தொடரும்.

குறிப்பாக நாளையும்(21.09.2026) நாளை மறுதினமும்(22.09.2026), கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள் மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
அதேவேளை பொலனறுவை, அனுராதபுரம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் வரத்து நீரை அதிகம் பெற வாய்ப்புள்ளது.

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகள் ஏற்கெனவே மகாவலி கங்கை மற்றும் ஏனைய சிறு ஆறுகளின் காரணமாக சிறிய அளவிலான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன.

குறிப்பாக நாளையும்(21.09.2026) நாளை மறுதினமும்(22.09.2026), கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள் மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளதனால் ஏற்கெனவே உள்ள வெள்ள அனர்த்த நிலைமை இன்று இரவு, நாளை, மற்றும் நாளை மறுதினம் இன்னமும் தீவிரம் பெற்று பல பகுதிகளும் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்கு உட்படக்கூடும்.

அதேவேளை தொடர்ச்சியான கனமழை காரணமாக நிலம் நீர்நிரம்பு நிலையை எட்டியுள்ளது. நிலம் முழு ஈரலிப்பான நிலையை எட்டியுள்ளதனால் கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்ட மக்கள் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதே போன்று துறைசார் அதிகாரிகளும் அடுத்த 72 மணித்தியலங்களுக்கு மேற்குறித்த மாவட்டங்கள் மீது அதிக கரிசனை கொண்டு போதுமான முன்னேற்பாடுகள், தயார்ப்படுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது கிடைக்கும் வெப்பச் சலன மழை தொடரும் அதேவேளை பல இடங்களுக்கும் விரிவடையும் வாய்ப்புள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு. கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இந்த வெப்பச் சலன மழை கன மழையாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் இன்று மாலையும் நாளையும் சற்றுக் கனமழையைப் பெறும்.
இந்த மழை இடிமின்னலோடு கூடிய மழை என்பதனால் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம்.

முன்னரே குறிப்பிட்டபடி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலபோக நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் புழுதி விதைப்புக்கான செயல்முறைகளை எதிர்வரும் 24.09.2026 இன் பின்னர் ஆரம்பிக்க முடியும். ஆனாலும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரம் ஒரு சில இடங்களுக்கே சிறிய மழை வாய்ப்பு உள்ளமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை பார்வையிட அனுமதி

புரட்டாதி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு

புரட்டாதி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு

புரட்டாதி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube