சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய எரிசக்தி அமைச்சர், உள்நாட்டில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே ஒப்பீட்டளவில் உயர் மட்டத்தில் உள்ள நிலையில், மேலும் விலை அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனைப் பொதுமக்கள் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாகக் கூறினார்.
இம்மாத இறுதியில் உள்நாட்டு எரிபொருள்களின் விலைகளை மீளாய்வு செய்யும்போது, அப்போதைய சர்வதேச எரிபொருள் விலைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
