அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (14) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மொத்தம் 1,197,728 குடும்பங்களுக்கு ரூ.11.16 பில்லியன் வழங்கப்படவுள்ளது. இதில் முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 குடும்பங்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 குடும்பங்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
