Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் சேகரிப்பு

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சவூதி அரேபியாவில் தண்டனை அனுபவித்து வரும் சிவராசா அனோஜனின் வழக்கை கருணை அடிப்படையில் பரிசீலித்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத்திடம் கோரிக்கை விடுக்கும் வகையில் மனுவொன்றை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனோஜனின் விடுதலையை வலியுறுத்திய மனுவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), தேசிய ஷூரா சபை மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவராசா அனோஜன் அவர்களின் வழக்கில் தங்களது ஆதரவை வழங்குவதுடன், இலங்கையில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகம் ஊடாக சவூதி அரேபிய மன்னரிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்து, அனோஜன் அவர்களின் வழக்கை கருணையுடன் பரிசீலிக்குமாறும் குறித்த அமைப்புகளிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிவராசா அனோஜன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சங்கபிட்டி எசல பெரஹரா: கடுவலையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 21 சந்தேக நபர்கள் கைது!

வைகாசி 23, 2026
இலங்கை

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

ஆனி 9, 2026

ஏற்றுமதித் துறை படைத்துள்ள புதிய சாதனை!

ஆவணி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube