Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சீனா கைகொடுக்கும் – சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங்

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகொடுக்க சீனா தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் தெரிவித்தார்.

கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள கெலுன் லைஃப்சயின்சஸ் மற்றும் செலோஜென் நிறுவனங்களுக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டபின் ஊடகங்களுக்கு அவர் இனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகொடுக்க சீனா தயாராக இருக்கிறது. சீனா எப்போதும் இலங்கையின் வளர்ச்சியை விரும்பும் ஒரு நாடு என்பதால், அந்த வளர்ச்சிக்காகக் கல்வி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் இயங்கி வரும் இதுபோன்ற நிறுவனங்கள் மூலம் பெருமளவிலான மக்கள் பயனடைவதால், இத்தகைய தொழில்களை விரிவுபடுத்தி மேலும் வளர்ச்சி பெறச் செய்ய சீனா ஆதரவளிக்கும்.

அத்துடன் இதுபோன்ற முதலீடுகளை ஊக்குவிக்க இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகளை சீன அரசு பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சீனா, இந்தியா மற்றும் இலங்கை கூட்டுப் பங்களிப்புடன் பல்லேகலை முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள நாட்டின் முன்னணி சேலைன் உற்பத்தி நிறுவனங்களான கெலுன் லைஃப்சயின்சஸ் மற்றும் செலோஜென் ஆகிய நிறுவனங்கள், இலங்கையில் உள்ள வைத்திய நிலையங்களுக்கு “சேலைன்” மருந்துகளை வழங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களுக்கே சீனத் தூதுவர் விஜயம் மேற்கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்!

ஆனி 18, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளையில் 40 போதைப்பொருள் பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் தடை!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube