Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி கண்களை மூடிக்கொண்டிருக்கிறார் – நாமல்

புரட்டாதி 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

கண்களை மூடிக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டது உண்மையே. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறார். எதிர்காலத்தில் கண்களை திறக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஆளும் தரப்பினர் பெருமையாக குறிப்பிடுகிறார்கள். இப்போது ஜனாதிபதி நாடு முழுவதும் செல்கின்றார். அவ்வாறு போக வேண்டும்தான். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தற்போது புதிய பொய்களை கூறுகின்றார். ஆயிரம் 4 – ஜீ தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதாக கூறியுள்ளார். ஆனால் இப்போது 5- ஜீ வந்துவிட்டது. இதனை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துங்கள் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

400 குளங்களை அமைப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அது நல்ல வேலையாக இருந்தாலும் செய்யாமல் இருப்பதுதானே பிரச்சினையாக இருக்கின்றது. இதற்காக நிதி ஒதுக்கப்படவும் இல்லை. முதலில் விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதன் பின்னர் மேலதிகமாக 400 குளங்களை அமைக்கலாம்.

ஜனாதிபதி தனது கண்களை மூடிக்கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார். அது உண்மைதான். தனது செயலாளர் துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிக்கின்றார். அது ஜனாதிபதிக்கு தெரியவில்லை. தவறான கணக்கிற்கு மில்லியன் கணக்கான டொலர்கள் வைப்பிலிடப்பட்டு மோசடி செய்யப்படுகிறது. அதுவும் ஜனாதிபதிக்கு தெரியாது. தொழில் வாய்ப்பில்லை, டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. அத்துடன் ஜனாதிபதி கண்களை மூடிக்கொண்டிருக்கும் போது தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு வந்துவிட்டது.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 159 பேரின் உடல்களை இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையும் இப்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் போதும் எவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தெரிகிறது.

இப்போது மக்களுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்கும் செயற்பாடுகள் நடக்கின்றன. தயவு செய்து இப்போது இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதனை கொண்டாடுங்கள். பொய்களை நிறுத்தி மக்களுக்காக பணியாற்றுங்கள் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில இடங்களுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்!

ஆனி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் – எதிர்வரும் செப்டம்பர் 15

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காருடன் மோதிய மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 வயது குழந்தையொன்று கால்வாயில் விழுந்து உயிரிழப்பு

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube