Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் 5 கிலோ அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

#வவுனியா #அம்பர்கிரிஸ் #கைது #இலங்கை #Vavuniya #Ambergris #Arrest #SriLankaNews #Police #BreakingNews

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியாவில் சுமார் 5 கிலோ எடையுடைய அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்த சுமார் 5 கிலோ அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்பர்கிரிஸும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ். ரத்னமலலா தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினம் – ஜூன் 12!

ஜூன் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதயாத்திரை நாயை தாக்கியவர் கைது!

ஜூன் 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினாரா?

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பிரச்சினை: கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

அக்டோபர் 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube