Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நாளை

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்துக்காக இரு நாட்களிலும் காலை 11.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை நேரத்தை ஒதுக்கியுள்ளது.

இரண்டு நாள் விவாதம் நிறைவடைந்த பின்னர், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 25ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதேவேளை, குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நேற்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளின் மூலம் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஹரக் கட்டா லஞ்ச வழக்கு: மூவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

ஜூலை 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில் 4.2% வளர்ச்சி

செப்டம்பர் 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநிலங்களவை உறுப்பினர் யார்?

மே 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் பொலிஸாரால் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் வைத்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் பலனாக, வைத்தியரின் கார் பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து நேற்றிரவு (23) கண்டெடுக்கப்பட்டது. இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர். இதன்போது, காணாமல் போன வைத்தியரின் சடலம் அப்பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சுமார் 800 மீற்றர் உட்புறமாக அமைந்திருந்த பாறையொன்றின் மீது கிடந்த நிலையில் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து 3 வகையான மருந்துகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதற்கமைய, அந்த மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளமையும் பொலிஸாரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube