Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுஞ்சாலைகளில் நுழைவுசீட்டு மோசடிகள் காரணமாக 4 614 மில்லியன் வருமான இழப்பு

செப்டம்பர் 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

வீதி அபிவிருத்தி அதிகார சபை கடந்த 2019 நவம்பர் தொடக்கம் 2024 ஜுலை வரையிலான நான்கு வருடம் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவுசீட்டு மோசடிகள் காரணமாக 4 614 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை இழந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மேற்குறித்த காலப்பகுதியினுள் 133.8 மில்லியனுக்கும் அதிகமான நுழைவு சீட்டுக்கள் வழங்கப்பட்ட போதிலும் 18.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு வெளியேறுவதற்கான சீட்டுகள் வழங்கப்படவில்லை.

இதன் விளைவாக அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து நாளாந்தம் ஏறத்தாழ ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருவாயினை தவறாக பயன்படுத்துவதற்கும் மோசடிகள் செய்வதற்கும் பல்வேறு வழமுறைகளில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் காசாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ அல்லது மேற்குறித்த மோசடிகளை தடுக்கவோ எவ்வித நடவடிக்கைகளையும் அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.

குறித்த காலப்பகுதியினுள் அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவு வாயில்களில் பணிபுரிந்த காசாளர்கள் வாகன வகைகளை மாற்றி 241,964 நுழைவு சீட்டுகளை வழங்கியுள்ளனர்.

இத்தகைய தவறுகள் 2019 ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்து வந்துள்ளதுடன் இத்தகைய காசாளர்களின் சுயவிருப்பு மற்றும் கவனயீனத்தினால் ஏற்பட்ட தவறுகளை கட்டுப்படுத்தி நிதியிழப்பினை தடுப்பதற்காக முறையான உள்ளக பொறிமுறைகளும் காணப்படவில்லை.

குறித்த காலப்பகுதியினுள் அதிவேக நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை விஸ்தரிக்கும் நோக்கில் 611,374 மில்லியன் ரூபா கடன்தொகையானது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளின் சராசரி ஆண்டு வருமானம் 3,560.62 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த தொகையினை வைத்து பார்க்குமிடத்து வட்டி செலுத்துதல் நீங்கலாக கடன் அசல் தொகையை மட்டும் திரும்ப செலுத்துவதற்கு 171 ஆண்டுகளுக்கு மேலாகும். அதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து பெறப்படும் வருமானம் கடன் அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துதல் ஆகிய இரண்டினையும் ஈடுசெய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என கணக்காய்வு அறிக்கை மேலும் சுட்டிகாட்டியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார் – 75 வயதில் மறைவு; திரையுலகினர் இரங்கல்

அக்டோபர் 17, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல்

செப்டம்பர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் பொலிஸார் துரத்திச்சென்ற சைக்கிள் விபத்துக்குள்ளானது!

ஜூன் 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பலாங்கொடை யானை வேலித் திட்டம்: 7 கிராமங்களுக்குத் தீர்வு!

ஜூலை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube