Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்கட்டணம் குறைப்பு தொடர்பில் இப்போது தெரிவிக்க முடியாது – எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை எப்போது குறைக்க முடியும்? என்பது தொடர்பான காலவரையறையை தற்போது குறிப்பிட முடியாது என, எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களையும், மின்கல சேமிப்பு திட்டங்களையும் அதிகரித்து, மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் மின்சார உற்பத்திச் செலவு தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, உற்பத்திச் செலவு குறையும் நிலையில், அதற்கேற்ப மின்சாரக் கட்டணக் கணக்கீடுகளிலும் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மின்சாரக் கட்டணம் இவ்வளவு சதவீதம் குறையும் என தற்போது கூற முடியாது எனவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் கிடைக்கும் பயன்கள் கட்டண நிர்ணய நடைமுறை ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

ஜனநாயகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி

ஆடி 24, 2026
இலங்கைவானிலை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

புரட்டாதி 26, 2026
இலங்கைவானிலை

8 மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி அதிபர் உயிரிழப்பு!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube