இரத்தினபுரி உடவலவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசியமான பராமரிப்புப் பணிகளினால் இன்று (29) சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முற்பகல் 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு சங்கபால, பனஹதுவ,கொலம்பகே ஆர, 97 ஆம் கட்டை மற்றும் 98 ஆம் கட்டை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்குச் சபை வருத்தம் தெரிவிப்பதுடன், முன்கூட்டியே நீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோரைத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
