Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய உத்தரவு

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

குழந்தை ஒன்றின் தந்தை தான்தான் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நிலையில், குறித்த குழந்தையின் பராமரிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினால், கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேற்படி வழக்கு நேற்று (28) கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நேற்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாமிக கருணாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இருப்பினும், சாமிக கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய கடமையில் ஈடுபடுவதற்காக ஜப்பானில் தங்கியுள்ளார்.

வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தேசிய கடமை காரணமாகவே அவர் முன்னிலையாகவில்லை என்பது நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படவில்லை.

ஆகையால் அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த குழந்தைக்குரிய பராமரிப்புக்கான பணத்தை அறவிட்டுத் தருமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்குழந்தையின் பராமரிப்புக்கு தேவையான பணத்தை செலுத்துமாறு சாமிக கருணாரத்னவிற்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த குழந்தையின் தந்தை தான் என்பதை சாமிக கருணாரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை 2026 ஆம் ஆண்டின் உலகின் முன்னணி நலன் சுற்றுலா இடமாகத் தேர்வு!

ஆனி 27, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உலக ரோபோ மாநாடு – ரோபோக்களின் உலகம்

ஆவணி 21, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ஸஹீர் கான் நியமனம்

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube