Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புரட்டாதி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாடசாலைக் கல்வி அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில், தரம் 1, 2 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்காக திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவிற்கே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் தரம் ஒன்றுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் அதேவேளை, தரம் 2 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கான புதிய சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இச்சீர்திருத்தங்களுக்காக, 2027 ஆம் ஆண்டின் மூன்று தவணைகளையும் உள்ளடக்கிய தரம் 1 மற்றும் 2 க்கான செயல்முறைப் புத்தகங்கள், தரம் 6 க்கான கற்றல் தொகுதிகள் மற்றும் ஆசிரிய வழிகாட்டிகள் அச்சிடுவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தேசிய கல்வி நிறுவனத்தினால் முதன்மைப் பயிற்றுநர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, மாகாண மட்டத்திலான ஆசிரியர் பயிற்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

பாடசாலை அமைப்பிலுள்ள வளங்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலை அடிப்படையிலான புதிய மதிப்பீட்டுக் கொள்கை வழிகாட்டுதலும் இதன்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2026 இல் தரம் 1 மற்றும் 6 க்கான சீர்திருத்தங்களை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தரம் 1 சீர்திருத்தங்களை இவ்வாண்டிலும், தரம் 6 க்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் எம்.பி. சுமந்திரன் இடையே சந்திப்பு

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை குறைத்தது பாகிஸ்தான்!

ஆனி 21, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இனி பிரிட்ஜ்க்குள் இருக்கலாம் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube