Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவரையில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு

#சட்டவிரோததுப்பாக்கிகள் #துப்பாக்கிகள் #சட்டவிரோதஆயுதங்கள் #ஆயுதமீட்பு #இலங்கை #SriLanka #IllegalFirearms #Firearms #WeaponsSeized #LawEnforcement #CrimeNews #BreakingNews

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை 14 (T-56) ரக துப்பாக்கிகள், 33 கைத்துப்பாக்கிகள் மற்றும் 25 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 891 துப்பாக்கிகள் பொலிஸ் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் மூலம் 74 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 2,404 துப்பாக்கிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட மொத்தம் 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

ஆவணி 10, 2026
இலங்கை

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா கைது!

ஆனி 10, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

‘Hi’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பு விலை 18.5% உயர்வு!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube