ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி,ருமேஷ் தரங்கவின் இந்த சாதனை முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இலக்காகக் கொண்டு பயணிக்கும் அவரது எதிர்கால விளையாட்டுப் பயணத்திற்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் சாதனைகளைப் படைக்கத் துடிக்கும் ருமேஷ் தரங்க உள்ளிட்ட அனைத்து இலங்கை விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் என்பதையும் ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
“வானமே எல்லை, தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள் ருமேஷ் – முழு நாடும் உங்களுடன் நிற்கிறது!” என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
