Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு கொலைச் சம்பவங்களில் மூவர் பலி

#கொலை #கொலைச்சம்பவம் #மூவர்பலி #சட்டம் #பாதுகாப்பு #இலங்கை #CrimeNews #SriLanka #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த 24 மணி நேரத்திற்குள் கடுகன்னாவ மற்றும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வீட்டில் இருந்து உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, இந்த கொலையை உயிரிழந்த பெண்ணின் கணவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

இச்சம்பவத்தையடுத்து சந்தேகநபரான கணவர் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் மற்றும் சந்தேகநபரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடுகன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலுன்கல பகுதியில் மதுபான போத்தலால் தாக்கப்பட்டு காயமடைந்த 39 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்த நிலையில், இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவங்கள் தொடர்பில் கிரிந்திவெல மற்றும் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் கருத்தரங்கு !

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் உடனான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதல்ல – ட்ரம்ப்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டாரில் இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறை மார்ச் மாதத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube