Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

1200 வகையான உணவுகள் – நோவா உலக சாதனை

ஐப்பசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான இயற்கை உணவுத் திருவிழாவில் 1,200 வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, ‘நோவா உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகம் முழுவதும் உள்ள 22 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் இணைந்து, அடுப்பு, எண்ணெய் மற்றும் வேகவைக்கும் முறைகளைப் பயன்படுத்தாமல் 1,200 வகையான உணவுகளைத் தயாரித்து காட்சிப்படுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தி இட்லி, புட்டு, நூடுல்ஸ், சாம்பார் சாதம், புளிசாதம், கொழுக்கட்டை, தோசை உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

மேலும், பீட்சா, பர்கர், மோமோஸ், சாண்ட்விச், கேக், லட்டு, கட்லெட், அல்வா மற்றும் பிரியாணி உள்ளிட்ட பிரபலமான உணவு வகைகளும் இயற்கை முறையில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தேங்காய்ப்பாலைப் பயன்படுத்தி தயிர் தயாரித்தல், பழங்களைப் பயன்படுத்தி இயற்கை மயோனைஸ் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு உணவு தயாரிப்பு முறைகளும் நிகழ்வில் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே, மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இயற்கை உணவு மற்றும் நல்வாழ்வு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வை பார்வையிட்ட ஏராளமான பொதுமக்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்வையிட்டு, சில உணவுகளைச் சுவைத்தும் மகிழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கம் 1854.77 மில்லியன் அ.டொலர் அரசமுறை கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் கடும் அழுத்தம்! சுகாதார நெருக்கடி!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேக பாதை!

ஆவணி 4, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ? பெங்களுரு – குஜராத் இன்று மோதல்

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube