நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளன.
கடுவலை – மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 256 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் உள்ளடங்குவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட நிலையில், புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 2025ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
4,375 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் வீடுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் பயனாளிகளிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
