Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொடி பெட்டி கொலைக்கு பழிவாopங்கலா?

அக்டோபர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

கொஸ்கொடை – மஹா இந்துருவ பகுதியில் பாதாள உலகக் குழுவினருக்கும் பொலிஸாருக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘லொக்கு பெட்டி’ தரப்பின் துப்பாக்கிதாரிகள், ‘கரந்தெனிய சுத்தா’ தரப்பைச் சேர்ந்த நான்கு பேரைக் இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது விளக்கமறியலில் உள்ள ‘லொக்கு பெட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பெட்டி’ என்பவர் கடந்த முதலாம் திகதி அஹுங்கல, வலிகந்த பகுதியில் வைத்து நடந்து வந்த துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அந்தக் கொலைக்குச் பழிவாங்கும் நோக்கிலேயே ‘லொக்கு பெட்டி’ தரப்பினர் இந்த நான்கு பேரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (03) இரவில் கொஸ்கொடை- அகாடேகொட பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு பேரைக் கொலை செய்வதற்காகச் ஆயுதங்களுடன் கும்பலொன்று தங்கியிருப்பதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதற்கமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்துத் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுற்றிவளைப்பின் போது, பொலிஸாரைக் கண்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பொலிஸார் நடத்திய எதிர்ச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்தார்.

அத்துடன், அங்கிருந்த மற்றொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், பிறிதொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றும் காயமடைந்த சந்தேகநபர்கள் 32 மற்றும் 33 வயதுடைய மஹா இந்துருவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் நடத்திய தீவிர சோதனையின் போது 9 மி.மீ ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 8 தோட்டாக்கள் கொண்ட மெகசின், ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 6 தோட்டாக்கள், 9 மி.மீ ரக மெகசின் ஒன்று, 6 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மற்றும் குற்றச் செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்தத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன ஆயுதங்களும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுகளும் மேலதிக நடவடிக்கைக்காகக் கொஸ்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்கொடை பொலிஸாரும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் மெனின்ஜைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய்!

மே 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமை நீதியரசரை இலக்கு வைத்து வெளியான கருத்துகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆகஸ்ட் 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் தனது அணுசக்தி கனவைக் கைவிடுமா அல்லது ரஷ்யாவின் உதவியுடன் போரைத் தொடருமா?

ஏப்ரல் 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் காப்பாற்றப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

மே 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube