வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏவுகணை சோதனையானது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதுடன், அது 1,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிழக்குக் கடற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
