Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனம்

#கடற்றொழில் #நியமனக்கடிதம் #கடற்றொழில்உத்தியோகத்தர்கள் #வேலைவாய்ப்பு #இலங்கைசெய்தி #நியமனம் #மீன்பிடித்துறை #அரசுநியமனம்

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புதிதாக நியமனம் பெற்ற 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் துறையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மாவட்ட மட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கும் நோக்கில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மோடியின் இன்ஸ்டா பதிவு சாதனை

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் தனது அணுசக்தி கனவைக் கைவிடுமா அல்லது ரஷ்யாவின் உதவியுடன் போரைத் தொடருமா?

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல் கண்காட்சி!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube