Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிசர சிறைச்சாலை கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் – சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு

ஐப்பசி 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

வெலிசர கடற்படை முகாமுக்குள் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கடற்படை சிப்பாய் ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம் சாட்டியுள்ளது.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் நேற்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வெலிசர கடற்படை முகாமுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் கடுமையான மற்றும் விசேட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி கடற்படை சிப்பாய் ஒருவர், ‘நீங்கள் சிறைச்சாலைக்கு பெரியவர்களாக இருக்கலாம் எங்களுக்கு நீங்கள் பெரியவர்கள் அல்ல. எனது கையில் ஆயுதம் கிடைத்தால் உங்கள் அனைவரையும் சுட்டுக்கொன்று விடுவேன்’ என கைதிகளை அச்சுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற நியாயமான அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு வழங்குதல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் வெளியில் அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.

கடந்த 23ஆம் திகதி சிறைச்சாலை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தடிகள் மற்றும் தடிகளுக்கு ஒத்த பொருட்களுடன் சென்று, தேவையற்ற வகையில் நடந்துகொண்டால் சில விடயங்கள் இடம்பெறக்கூடும் என மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளார்.

கைதிகளை சந்திக்க குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வீடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

கைதிகள் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்து பொலிஸில் தெரிவிக்க அனுமதி கோரியபோதும், அவர் தானே முறைப்பாடு செய்வதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், கண்காணிப்பு கமராக்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் திட்டமிட்ட சதித்திட்டம் தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மெகசின் சிறைச்சாலையிலும் கைதி தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலைமையில் வெலிசர கைதிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம். ஏற்கனவே மகாபாகே பொலிஸ் நிலையத்தில் ஜே. ஏசிலின் என்ற கைதியின் தாயார் மரண அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக

ஆவணி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கதிர்காமம் செல்லத் தயாரான தாய் விபத்தில் பலி; இரு மகன்கள் காயம்!

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு ஜூன் 26 இல்

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube