பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியின் 05 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, அதற்கு எதிர்திசையில் வந்த தனியார் பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞரை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
