Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

அக்டோபர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன், புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிலாபம் முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றருக்கும் அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இதேவேளை, காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் 1.5 முதல் 2.0 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சமயங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பை பயணம் நிறைவு!

ஜூலை 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெறுவதிலும் சொத்துக்களை வாங்குவதிலும் மக்கள் சிரமம் – இராதாகிருஷ்ணன்

அக்டோபர் 21, 2026
இலங்கைவிளையாட்டு

யாழ் கிங்ஸ் அணிக்கு புதிய உரிமையாளர்கள்!

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவரை பதிவுசெய்யாத முதியோர் இல்லங்கள் செப்டம்பர் 30க்கு முதல் பதிவுசெய்ய வேண்டும்!

ஜூலை 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube