கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 30 கிராம் 128 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்ற விசாரணை பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
