Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

ஷிரந்தி ராஜபக்ச ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில்

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (07) காலை இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாய் (100 இலட்சம் ரூபாய்) பெறப்பட்டு, அந்த நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணை, ஷிரந்தி ராஜபக்ச தலைமையிலிருந்த ‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதி நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நிதி முறைகேடுகள் மற்றும் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதே வழக்குடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் கரியவசமும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவர் மீண்டும் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாளை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

ஜூலை 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

திட்வா புயல் நிவாரணம் : எலஹெர பகுதி மக்களுக்கு 400 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கி வைப்பு!

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகைதந்தார்!

மே 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் மூலம் பண மோசடி – CERT எச்சரிக்கை

அக்டோபர் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube