பொகவந்தலாவை டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஆற்றுப்படுக்கையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
