ஹபராதுவ – கினிகல பகுதியில் வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் சடலங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும், அதனால் இவர்கள் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 81 மற்றும் 87 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு பெண்களும் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று சிலர் வீட்டுக்குள் நுழைந்து, கற்களால் இவர்களை தாக்கிய பின்னர், உடலங்களை வீட்டின் பின்புறத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
