Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளுக்கு ஜீவன் தொண்டமான் கண்டனம்

அக்டோபர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையகத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அவர், தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் மலையக மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்டகாலமாக ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய அவர், ‘கள்ளத்தோணி’ உள்ளிட்ட அவமதிப்பான சொற்களை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

இனம், மதம் அல்லது சமூகப் பின்னணி அடிப்படையில் எந்தவொரு சமூகத்தையும் இழிவுபடுத்தக் கூடாது என வலியுறுத்திய ஜீவன் தொண்டமான், நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையும் மரியாதையும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

மே 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்தெனியவில் காரொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

ஜூன் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை கடற்கரையில் சுமார் 50 வயது ஆணின் சடலம் மீட்பு!

அக்டோபர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காண அறிவுறுத்தல்

ஜூன் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube