Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

VAT வரியை குறைக்க அரசாங்கம் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொதுமக்களுக்கு நிதி நிவாரணம் வழங்கும் நோக்கில், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பெறுமதி சேர் வரி (VAT) விகிதங்களை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் 1,540 புதிய கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கியபோது ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை படிப்படியாக குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். குறிப்பாக, மாணவர்கள் பாடப்புத்தகங்களை கொள்வனவு செய்யும்போது அதற்கும் வரி செலுத்த வேண்டிய நிலை இருக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வரிகளை குறைப்பதுடன் அரசாங்கத்தின் செலவினங்களையும் சமநிலைப்படுத்த வேண்டியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்புக்காக 2027ஆம் ஆண்டளவில் அரசாங்கத்திற்கு சுமார் 330 பில்லியன் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் இவ்வாறான நிதி மற்றும் வரி தொடர்பான விடயங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

இறக்குவானையில் யானை தாக்குதல்: இருவர் உயிரிழப்பு!

ஜூன் 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரம்!

ஜூலை 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசியா -புளோரஸில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

ஆகஸ்ட் 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸா மோதலை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் முன்வைத்த புதிய திட்டம்!

ஆகஸ்ட் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube