நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 166 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,594 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாதாரண வானிலை காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 4 வீடுகள் முழுமையாகவும் 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 47,583 குடும்பங்களின் 156,756 பேர் வறட்சியான காலநிலையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 28 பிரிவுகளில் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த 128,977 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
