மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, விசேட அதிரடிப்படையின் (STF) சுமார் 300 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று (02) சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, சிறைச்சாலையினுள் இருந்த கைதிகளை உரிய வார்டுகளுக்கு (Ward) அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது சிறைச்சாலை வளாகத்தின் நடவடிக்கைகள் முழுமையாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
