போர்த்துக்கலின் லிஸ்பன் மற்றும் போர்ட்டோ உள்ளிட்ட நகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வீடுகளைப் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாடகைச் செலவுகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வது சவாலாக மாறியுள்ள நிலையில், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் மலிவு விலையில் வீடுகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
