காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் வான்வழித் தாக்குதலில் குறைந்தது இரு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை தெற்கு காசா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, கான் யூனிஸ் நகரின் மவாசி பகுதியில் கூடாரமொன்றைத் தாக்கிய சம்பவத்தில் மேலும் மூவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்கள் ஆயுதக் குழுவினரை இலக்காகக் கொண்டவை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, போர் நிறுத்த முயற்சிகள் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
2025 அக்டோபரில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னரும் காசாவில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்தக் காலப்பகுதியில் இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களால் குறைந்தது 1,400 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
