நாட்டின் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது தலா ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.
மேலும் வினாடிக்கு 1400 கன அடி கொள்ளளவு நீர் தெதுரு ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தெதுரு ஓயா ஆற்றுப் படுகையில் ஏற்கனவே மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
