பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய எட்டு மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
