மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (16) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், குற்றவாளிக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் பின்னர், கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
