Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழையுடன் அதிகரிக்கும் டெங்கு அபாயம்

#டெங்கு #டெங்கு_அபாயம் #டெங்கு_ஒழிப்பு #நுளம்பு_ஒழிப்பு #மழைக்காலம் #டெங்கு_எச்சரிக்கை #சுகாதாரம் #பொதுமக்கள்_எச்சரிக்கை #Dengue #DenguePrevention #DengueAlert #SriLankaNews #TamilNews #BreakingNews

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு அதிதீவிரப் பெருந்தொற்று நிலைமை உருவாகக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.

மழைக்காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வரலாற்று ரீதியாக அவதானிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையைத் தொடர்ந்து பேணுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட தீவிர டெங்கு பரவல் மற்றும் பெருந்தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு பெரும் பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மீண்டும் இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்களைத் தொடர்ந்து பரிசோதிக்குமாறும், நீர் தேங்குவதைத் தடுப்பதுடன் நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவலைத் தடுப்பதற்கு அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால், அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.109.9 மில்லியன் கொக்கெய்ன் பறிமுதல்!

ஜூலை 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தொடரும் மாணவர் போராட்டம் – மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி

ஜூலை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முன்னணி சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

ஆகஸ்ட் 20, 2026
இலங்கைஉலகம்

மத்திய ஆப்பிரிக்காவில் SLAF அவசர CASEVAC – 14 பேரை வெற்றிகரமாக மீட்பு!

ஜூலை 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube