Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்

விமானத்தில் குழந்தை பிரசவித்த தமிழ் பெண்!

#குவைத் #கட்டுநாயக்க #விமானத்தில்_பிரசவம் #ஆண்_குழந்தை #திருகோணமலை #நீர்கொழும்பு_வைத்தியசாலை #இலங்கை_செய்திகள் #BreakingNews #SriLankaNews #TamilNews #Kuwait #Katunayake #FlightBirth

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த அல் ஜசீரா விமானத்தில், இலங்கைப் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணே இன்று அதிகாலை விமானத்தினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதற்காகக் குவைத்திற்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.52 மணியளவில் குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரசவக் காலம் நெருங்கிய பெண்கள் விமானப் பயணம் மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், குறித்த பெண் தனது கர்ப்ப நிலையை விமானச் சேவை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்தபோது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் விமானத்தினுள்ளேயே அவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விமானி கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கியதும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, தாயும் சேயும் மேலதிக மருத்துவப் பராமரிப்புக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பூனாவையில் பேருந்து மோதி விபத்து – ஆசிரியை உயிரிழப்பு

ஜூன் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருளுடன் இருவர் கைது!

மே 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – குறைந்தது 25 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 8, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களின் மலம் மற்றும் சிறுநீரைச் சுத்திகரித்து மறுசுழற்சி புதிய தொழில்நுட்பம்

செப்டம்பர் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube