Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காவந்திஸ்ஸ யானையின் இழப்பு:  குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

அக்டோபர் 19, 2026
படிக்க 4 நிமிடங்கள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்த இலங்கையின் தேசிய பொக்கிஷமாகக் கருதப்பட்ட காவந்திஸ்ஸ யானையின் இழப்பு குறித்து அரசாங்கம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Contents
காவந்திஸ்ஸ யானையின் இழப்பு குறித்து அரசாங்கம் அதிர்ச்சி‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்பது வெறும் துப்புரவுத் திட்டமல்லமனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை26 ஆண்டுகளுக்குப் பின்னர் சுற்றாடல் சட்டத்தில் திருத்தம்195 விருதுகள் வழங்கி வைப்பு

அத்துடன், சுற்றாடல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தராதரம் பாராது சுற்றாடல் சட்டங்கள் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

May be an image of text

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2026 விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் 11ஆவது முறையாக இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காவந்திஸ்ஸ யானையின் இழப்பு குறித்து அரசாங்கம் அதிர்ச்சி

காவந்திஸ்ஸ யானையைக் காப்பாற்றுவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகளும் வனவிலங்கு மருத்துவக் குழுக்களும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும், யானைக்கு ஏற்பட்டிருந்த பலத்த காயங்கள் மற்றும் தொற்று காரணமாக அதனைக் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இழப்பு மீண்டும் நிகழாத வகையில், வனவிலங்குகளுக்கான மருத்துவச் சிகிச்சை வசதிகளையும் கால்நடை மருத்துவக் கல்வியையும் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும், சுற்றாடல் குற்றங்களில் ஈடுபடுவோர் பதவி, செல்வம் அல்லது செல்வாக்கைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்பது வெறும் துப்புரவுத் திட்டமல்ல

ஒரு நாட்டின் செழிப்பை பொருளாதாரச் சுட்டிகளைக் கொண்டு மாத்திரம் மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த பிரதமர், சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் எனக் குறிப்பிட்டார்.

இந்த நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம், வீதிகளைச் சுத்தம் செய்வதற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

May be an image of text

கழிவுகளைக் குறைத்தல், கழிவுப் பொருட்களை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் சுற்றாடல் தொடர்பான மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய மாற்றமாகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போதும், அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போதும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்களும் முழுமையான வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

சுற்றாடலை அழித்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை நிலையான அபிவிருத்தியாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

நீண்டகாலமாக நிலவி வரும் மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கமைய, 113 காடுகளை வனக் காப்பகங்களாக மாற்றி, சுமார் 71,900 ஹெக்டேயர் நிலப்பரப்பைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான மூன்று யானை வழித்தடங்களையும், யானை முகாமைத்துவத்திற்கான பிரத்தியேகக் காப்பகத்தையும் உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் களப்பணிகளை வலுப்படுத்துவதற்காக 100 கப் ரக வாகனங்கள், 185 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒன்பது உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், யானை வேலிகளைப் பராமரிப்பதற்காக 3,500 யானை வேலி உதவியாளர்களும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5,000 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

26 ஆண்டுகளுக்குப் பின்னர் சுற்றாடல் சட்டத்தில் திருத்தம்

சுற்றாடல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், சுற்றாடல் அமைச்சின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக 1,600க்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுற்றாடல் பாதுகாப்பு என்பது தற்காலிகமான திட்டமாக இல்லாமல், அரச கொள்கையிலும் ஒவ்வொரு பிரஜையினதும் அன்றாட வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரைப் பசுமைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தல், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைமுறைச் சுற்றாடல் கல்வியை மேம்படுத்துதல், மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புணர்வை வளர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான, அழகான மற்றும் சுத்தமான நாட்டைக் கையளிப்பதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

195 விருதுகள் வழங்கி வைப்பு

இயற்கை வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்த நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் சான்றிதழ் விருதுகள் உள்ளிட்ட மொத்தம் 195 விருதுகள் வழங்கப்பட்டன.

தங்க விருதுகளைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரடியாக வழங்கி வைத்தார்.

May be an image of dais and text

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் விருதாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

935,000 போதை மாத்திரை மற்றும் டிங்கி படகு ஒன்றுடன் ஒருவர் கைது!

ஜூலை 2, 2026
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஜூலை 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் வறட்சியான வானிலை

ஆகஸ்ட் 24, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் – மீண்டும் போராட்டம் நடத்தப்படுமா?

ஆகஸ்ட் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube