ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கீவ் நகரின் சோலோமியான்ஸ்கி பகுதியில் அமைந்திருந்த 25 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ரஷ்யா மொத்தம் 269 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவியதாகவும், அவற்றில் 243 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
