புத்தளம் மாவட்டம், தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவில பகுதியில் 65 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தங்கொட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கூர்மையான ஆயுதத்தால் பெண்ணின் கழுத்துப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகத் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
