மொரட்டுவை, கல்கிஸ்ஸை சோய்சாபுர பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
