யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியின் இணுவில் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
