பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையத்தை உடைத்து, சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 99 டயர்களைத் திருடிய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 10 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 100 சிசிடிவி கமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியை அடையாளம் கண்ட பொலிஸார், சந்தேக நபரின் வீட்டிலிருந்து 66 டயர்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.
