பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் என புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.
ஞானசார தேரரை இன்று (23) சிறைச்சாலை வழிகாட்டுதல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, தேரரின் காவி உடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், ஞானசார தேரரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி இத்தபானே தம்மாலங்கார தேரருக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
