சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வெறிநாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
